கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடி நகரின் சார்பாக ஜூன் 27 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக 114 வது அவசர ஊர்தி அர்ப்பணிக்க பட்டது...
இந்த சிறப்பு மிகு நிகழ்வையொட்டி பல்வேறு நிகழ்சிகள் நகர தமுமுக சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டது அதில் முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத்தொகுப்பே இந்த பதிவு..
#1.ஆயங்குடி முழுவதும் ஆயங்குடி இன் வளர்ச்சிக்காக பாடுப்பட்ட முன்னோர்களின் நினைவாக சுமார் 6 இடங்களில் வரவேற்ப்பு வளையம் வைக்கப்பட்டது இந்த நிகழ்வு பொதுமக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
#2.ஆயங்குடி நகரை பசுமை நிறைந்த பகுதியாக மாற்றும் நோக்கில் மரங்கள் இல்லாத பகுதிகளில் மரக்கன்றுகளை தமுமுக மாநில செயலாளர் சகோ கோவை செய்யது அவர்களும் தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும் மரக்கன்றுகளை நட்டனர் இதற்கான ஏற்ப்பாட்டை நகர தமுமுக இளைஞர் அணி செய்தது குறிப்பிடத்தக்கது.
#3. ஆயங்குடி நகர புதிய தமுமுக அலுவலகத்தை தமுமுக மூத்த தலைவரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா அவர்கள் திறந்து வைத்து நகரின் முக்கியபகுதிகளில் கரு வெள்ளை கொடியை ஏற்றினார்.
#4. சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றும் நோக்கில் இருசக்கர வாகன பேரணி ஆயங்குடி நகர எல்லையில் இருந்து பொதுக்கூட்ட மேடைவரை நடைப்பெற்றது.
#5. இறுதியாக ஆயங்குடி சுற்றுவட்டார ஊராட்சிமன்ற தலைவர்கள்,மருத்துவர்கள்,சமூக ஆர்வலர்கள் ஊர் முக்கியச்தரர்கள் மற்றும் தமுமுக மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, அண்ணன் கோவை செய்யது, அண்ணன் மண்டலம் ஜெய்னுல்லாபுதீன், அண்ணன் கிதர் முஹம்மது ஆகியோரின் எழுச்சியரைகளுடன் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் மிகச்சிறப்பான முறையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் கடலூர் தெற்கு மாவட்டத்தின் நிர்வாகிகள், உள்ளூர் மற்றும் வௌியூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவரணி மற்றும் தொண்டரணி சகோதரர்கள், பொதுமக்கள், உலமாக்கள் என அனைத்து தரப்பு மக்களும் கலந்துகெண்டு சிறப்பித்தனர்.
மிகச்சிறப்பாக நடைப்பெற்ற இந்த நிகழ்வுக்காக உடலாலும் பொருளாதாராத்தாலும் உதவி செய்திட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக & மமகவின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்..
மேலும் இந்நிகழ்ச்சி ஊரின் வரலாறு காணாத முறையில் சிறப்பாக நடைபெற இரவு பகல் பாராமல் உழைத்த ஆயங்குடி தமுமுகவின் செயல்வீரர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும் மக்கள் சேவையில்,
தமுமுக & மமக
ஆயங்குடி நகரம்
நேரம் : மாலை 5:00
இடம் : ஆண்கள் அரபிக் கல்லுரி எதிரில் , ஆயங்குடி
Please Register Your Comments